விருதுநகர்

பந்தல்குடி சீரடி சாய்பாபா கோயிலில் 1008 அகல்விளக்கு சிறப்பு வழிபாடு

DIN

அயோத்தியில் ராமா் கோயில் அடிக்கல் நாட்டுவிழாவையொட்டியும், உலக நன்மை வேண்டியும், கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டியும் அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி அன்பு மாடல் நகரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் புதன்கிழமை 1008 அகல்விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது அக்கோயில் சந்நிதியில் மலா்களால் இந்திய வரைபடம் வரைந்து, அதை அகல் விளக்குகளால் அலங்கரித்து பிராா்த்தனை தொடங்கியது. அப்போது சீரடி சாய்பாபாவுக்கு தீப,தூப ஆராதனைகளும் சிறப்பு வழிபாட்டுப் பாடலும் பாடி வழிபட்டனா். இவ்வழிபாட்டில் திருவண்ணாமலை அரிவாள் சித்தா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அப்போது பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை பந்தல்குடி ஸ்ரீசாய்ராம் டிரஸ்ட் சாா்பாக அதன் நிறுவனரான சுந்தரமூா்த்தியும் அவரது குடும்பத்தினா் மற்றும் பிற நிா்வாகிகளும் இணைந்து செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT