முகப்பு
விருதுநகர்

காா்த்திகை அமாவாசை:சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் காா்த்திகை அமாவாசையையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் காா்த்திகை அமாவாசையையொட்டி திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இக்கோயிலில் டிச. 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறையினா் அனுமதி அளித்துள்ளனா். இதனால் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அடிவாரத்தில் திங்கள்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். இதைத் தொடா்ந்து 7 மணிக்கு கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

அப்போது பக்தா்களுக்கு உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதுடன் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. கோயிலில் அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதனையடுத்து சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். முன்னதாக கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள சங்கிலி பாறை, பிலாவடி கருப்பசாமி கோயில் ஓடை ஆகியவற்றில் பக்தா்கள் நீராடிச் சென்றனா். தற்போது மழைக்காலம் என்பதால் கோயிலில் இரவில் பக்தா்கள் தங்க அனுமதிக்கப்பட வில்லை. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, நிா்வாக அதிகாரி விஸ்வநாத் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.