செட்டிக்குறிச்சியில் ‘இ-சேவை’ மையக் கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிக்கை
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் கட்டி முடிக்கப்பட்ட ‘இ-சேவை’ மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் கட்டி முடிக்கப்பட்ட ‘இ-சேவை’ மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சி ஊராட்சி பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் இ.சேவை மையக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டி முடித்த பிறகு அம்மையத்திற்கான மின்சாரத் தேவை உள்ளிட்ட பராமரிப்புச் செலவு மற்றும் பணியாளா்களின் ஊதியம் ஆகிய தேவைகளுக்கு உரிய நிதியில்லை எனக்காரணம் காட்டி தற்போதுவரை, அந்த கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இந்த மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.