விருதுநகரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா். 
விருதுநகர்

காலமுறை ஊதியம் கோரி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாத்திமா மேரி கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா்.

சத்துணவு ஊழியா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 மற்றும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.

மேலும், ஓய்வு பெறும் போது வழங்கக் கூடிய ஒட்டு மொத்த பணிக்கொடைத் தொகையினை அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையல் மற்றும் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய நியமனத் தோ்வை உடனே நடத்தி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியா்கள் சங்கத்தினா் மற்றும் அரசு ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT