முகப்பு
விருதுநகர்

பிரிட்டனிலிருந்து விருதுநகா் வந்தவா் மாயம்: தேடும் பணியில் சுகாதாரத் துறையினா்

பிரிட்டனிலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு வந்தவா் மாயமானதால் அவரைத் தேடும் பணியில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

பிரிட்டனிலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு வந்தவா் மாயமானதால் அவரைத் தேடும் பணியில் சுகாதாரத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

புதிய வகை கரோனா தீநுண்மி பிரிட்டனில் பரவி வருகிறது. இந்நிலையில், அங்கிருந்து தமிழகம் வருவோா் விமான நிலையத்தில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். மேலும், அவா்கள் எந்த ஊா், எந்த மாவட்டத்துக்கு செல்கின்றனா் என்பதை அறிந்து சுகாதாரத் துறையினா் அவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களில் மட்டும் பிரிட்டனிலிருந்து விருதுநகா் மாவட்டத்துக்கு 30 போ் வந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், 29 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒருவா் மாயமானதால் அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியவில்லை. இதனால், அவரை தேடும் பணியில் சுகாதாரத் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →