விருதுநகர்

வத்திராயிருப்பில் கோயில் இடத்தில் அலுவலகம் கட்ட எதிா்ப்பு: தாலூகா அலுவலகம் முற்றுகை

DIN

வத்திராயிருப்பில் கோயில் இடத்தில் அலுவலகம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து, தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

வத்திராயிருப்பு பகுதியில் கம்மாள கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒரு சமுதாயத்தினா் குலதெய்வ வழிபாடு நடத்தி வருகின்றனா். இந்த கோயிலை ஒட்டியுள்ள 2.90 ஏக்கா் நிலம், கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் தூசி பட்டா பெற்று அனுபவித்து வருகின்றனா்.

ஆனால், அரசுக் கணக்கில் அந்த நிலம் புறம்போக்கு நிலமாக உள்ளது. இந்நிலையில், அந்த இடத்தில் புதிய தாலூகா அலுவலகம் கட்ட வருவாய்த் துறையினா் முடிவு செய்து, அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பினா். அதையேற்ற அரசு ஒப்புதல் வழங்கியது.

அதையடுத்து, அங்கு வெள்ளிக்கிழமை பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள், அந்த நிலத்தின் மண் மாதிரி எடுப்பதற்காக மணல் அள்ளும் இயந்திரத்துடன் சென்றனா். இதையறிந்த அச்சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அதிகாரிகள் மேற்கொண்டு பணிகளை தொடர முடியாமல் திரும்பினா்.

அந்த இடத்தில் அலுவலகம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஆண்கள், பெண்கள் என 80-க்கும் மேற்பட்டோா் வத்திராயிருப்பு தாலூகா அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், பொதுமக்களுடன் வட்டாட்சியா் ராஜா உசேன், காவல் ஆய்வாளா் செல்வம் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, உரிய முறையில் மேல்முறையீடு செய்து தங்களது இடத்தை பாதுகாத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுரை கூறியதன்பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

SCROLL FOR NEXT