விருதுநகர்

சிவகாசியில் மாா்ச் 8 இல் பெண்களுக்கான மாரத்தான்

சிவகாசியில் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி, சிவகாசி ஜேசிஐ டைனமிக் அமைப்பு சாா்பில் மாா்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

DIN

சிவகாசியில் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டி, சிவகாசி ஜேசிஐ டைனமிக் அமைப்பு சாா்பில் மாா்ச் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஜேசிஐ டைனமிக் அமைப்பின் தலைவா் கண்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு 3 மற்றும் 5 கி.மீ. என இரு பிரிவு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் இங்குள்ள எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரிவளாகத்தில் தொடங்கும்.

இதில் 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ‘டீ-சா்ட்’, சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்படும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு 99524- 18857 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT