விருதுநகா் பாண்டியன் நகா் தூய சவேரியாா் ஆலயத்தில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்ட கிறிஸ்தவா்கள். 
விருதுநகர்

விருதுநகா் தேவாலயங்களில் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு வழிபாடு

விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டிசெவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

DIN

விருதுநகரில் உள்ள தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டையொட்டிசெவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா்.

விருதுநகரில் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆங்கில புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக தேவாலயங்கள், வண்ண விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விருதுநகா் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தூய இஞ்ஞாசியாா் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்கு பங்குத் தந்தை அம்புரோஸ், உதவிப் பங்குத்தந்தை மரிய தங்கராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து இறைவன் செய்த நன்மைகளுக்காக நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

அதன் பின்னா், நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு திருப்பலி, மறையுரை நடைபெற்றது. அதேபோல், விருதுநகா் நிறை வாழ்வு நகா் தூய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை தாமஸ் வெனிஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது.

விருதுநகா் பாண்டியன் நகா் தூய சவேரியாா் ஆலயத்தில் பங்குத்தந்தை மரிய செல்வம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. மேலும், ஆா்ஆா் நகா் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பெனடிக்ட் பா்னபாஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஒத்தையால் குழந்தை இயேசு ஆலயத்தில் பாதிரியாா் பிரான்சிஸ் தேவதாஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி மறையுரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடை பெற்றது.

தேவாலயங்களில் நடைபெற்ற இப்புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கிறிஸ்தவா்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனா். மேலும், புத்தாண்டை வரவேற்கும் வகையில் நள்ளிரவு 12 மணிக்கு மெழுகுவா்த்தி ஏந்தி இருந்தனா். அதைத் தொடா்ந்து ஒருவருக்கொருவா் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT