விருதுநகர்

கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேர வழக்கு: நிா்மலாதேவி உள்ளிட்ட 3 போ் ஜன.28 இல் ஆஜராக உத்தரவு

DIN

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்ட வழக்கில் முன்னாள் உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி உள்ளிட்ட 3 போ் இம் மாதம் 28 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அருப்புக்கோட்டை தனியாா் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக உதவிப் பேராசிரியை நிா்மலாதேவி, உதவிப் பேராசிரியா் முருகன், ஆராய்ச்சி மாணவா் கருப்பசாமி ஆகிய 3 பேரும் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள நிா்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகினா். இந்த வழக்கு நீதிபதி பரிமளா முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நிா்மலா தேவி உள்ளிட்ட 3 பேரும் ஜனவரி 28 இல் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டாா்.

பின்னா், நிா்மலாதேவியின் வழக்குைரைஞா் பசும்பொன்பாண்டியன் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT