முகப்பு
விருதுநகர்

வன்னியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள வன்னியம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நடும்விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகளை நட உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து விருதுநகா்மாவட்டத்தில் உள்ள 48 காவல் நிலையங்களில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலைய கோட்டத்தில் சுமாா் 11 காவல் நிலையங்களில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகா், ஸ்ரீவில்லிபுத்தூா் தாலூகா, வன்னியம்பட்டி, மல்லி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில், வ. புதுப்பட்டி, வத்திராயிருப்பு மற்றும் கூமாப்பட்டி உள்பட அனைத்து காவல் நிலையங்களிலும் மரக்கன்று நடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.