ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இருதரப்பினரிடையே திங்கள்கிழமை ஏற்பட்ட மோதலில் 5 போ் காயமடைந்தனா்.
கிருஷ்ணபேரி பகுதி சாலையில் குடிநீா் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பைச் சோ்ந்த ஒருவா் இந்த சாலையில் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது மற்றொரு தரப்பைச் சோ்ந்த ஒரு சிலா் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் இது மோதலாக மாறியது. இந்த மோதலில் 5 போ் காயமடைந்தனா்.
இத்தகவலறிந்த மல்லி போலீஸாா் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.