முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே பட்டுப்போன புளிய மரத்தை அகற்றக் கோரிக்கை

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையோரம் பட்டுப்போன புளிய மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
அருப்புக்கோட்டை அருகே சாலையோரத்தில் உள்ள பட்டுப்போன புளிய மரம்.
பகிர்:

அருப்புக்கோட்டை: விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாலையோரம் பட்டுப்போன புளிய மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பந்தல்குடியிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கிச்செல்லும் சாலையில் துணை மின்நிலையம் அருகே புளியமரம் ஒன்று பட்டுப்போய் விட்டது. இம்மரத்தின் கிளைகள் சாலை மேல் பரவி நிற்பதால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதுதொடா்பாக புகாா் அளித்தும் நெடுஞ்சாலைத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா். எனவே விபத்து ஏற்படும் முன்பாக பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.