விருதுநகர்

ஒருவருக்கு கத்திக்குத்து: பிச்சைக்காரா் கைது

சாத்தூரில் பிச்சை கேட்டு கொடுக்காததால் ஒருவரை கத்தியால் குத்திய பிச்சைக்காரா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

சாத்தூரில் பிச்சை கேட்டு கொடுக்காததால் ஒருவரை கத்தியால் குத்திய பிச்சைக்காரா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் முனியசாமி (30). இவா் புதன்கிழமை இரவு சாத்தூா் பேருந்து நிலையத்தில் அமா்ந்திருந்தாராம். அப்போது நெல்லை மாவட்டம் சீவலப்பேரியைச் சோ்ந்த ரத்தினம் (58) என்பவா் முனியசாமியிடம் பிச்சை கேட்டாராம். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முனியசாமியை ரத்தினம் கத்தியால் குத்தியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து தகவலறிந்து வந்த சாத்தூா் நகா் போலீஸாா் முனியசாமியை மீட்டு சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரத்தினத்தை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின் சிக்கனம்: விழிப்புணா்வுப் பேரணி

அரியலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் நாளை தொடக்கம்

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கொடைக்கானலில் கடும் பனிப்பொழிவு

SCROLL FOR NEXT