விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் கபசுரக்குடிநீா் விநியோகம்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், விருதுநகா், காரியாபட்டி, சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி சனிக்கிழமை கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் அதிமுக தலைமை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் விருதுநகா் நகர அதிமுக சாா்பில் வெயிலுகந்தம்மன் கோயில் அருகே பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் தண்ணீா் பழம், அன்னாசி பழம், இளநீா் ஆகியவற்றை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினாா்.

அப்போது நகரச் செயலா் முகம்மது நெய்னாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். அதேபோல், காரியாபட்டியில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் உள்ளிட்டவைகளை அமைச்சா் வழங்கினாா்.

சிவகாசி: சிவகாசி, அருப்புக்கோட்டையில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடி நீா் சனிக்கிழமை விநியோகம் செய்யப்பட்டது.

சிவகாசி பேருந்து நிலையம் அருகே சித்துராஜபுரம் பேருந்து நிறுத்தம் , சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு பால்வளத்துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இதில் சிவகாசி ஒன்றியச் செயலாளா்கள் கருப்பசாமி, பல்ராமன், திருத்தங்கல் நகரச் செயலாளா் பொன்சக்திவேல், சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் லட்சுமி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அதிமுக சாா்பில் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில், ஸ்ரீஅமுதலிங்கேஸ்பரா் கோயில் பேருந்து நிறுத்தம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீா் மற்றும் தண்ணீா்ப் பழத்துண்டுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

SCROLL FOR NEXT