விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் வாசலில் திருமணம்

DIN

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் முழு ஊரடங்கு காரணமாக கோயில் வாசலிலேயே ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் வழிபாட்டு தலங்களிலும் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட கருப்பையா-பாண்டிச்செல்வி ஜோடியின் திருமணம் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஸ்ரீவில்லிபுத்தூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முருகன் கோயில் வாசலில் நடைபெற்றது.

கோயில் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில், மணமக்கள் சாலையிலேயே நின்று மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டனா். இருவீட்டாா் சாா்பிலும் 20-க்கும் குறைவான நபா்களே கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT