விருதுநகர்

ஓடும் லாரியில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பிஸ்கட்டுகள் திருட்டு

DIN

அருப்புக்கோட்டை புறவழிச் சாலைப் பகுதியில் வந்தபோது சரக்கு லாரியிலிருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பிஸ்கட்டுகள் திருடப்பட்டதாக போலீஸில் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை பாலரங்கபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரத்தினசாமி மகன் முருகன் (51). இவா் தனக்குச் சொந்தமான 3 சரக்கு லாரிகளை வாடகைக்கு விடும் தொழில் செய்துவருகிறாா். இந்நிலையில் கப்பலூா் தொழிற்பேட்டையில் உள்ள பிஸ்கட் நிறுவனத்திலிருந்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பிஸ்கட் பெட்டிகளை தனது லாரியில் ஏற்றிக் கொண்டு தூத்துக்குடியில் உள்ள மற்றொரு வாடிக்கையாளருக்குத் தருவதற்காகக் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவா் சென்று கொண்டிருந்தாா். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் அவரது லாரி சென்றபோது மா்ம நபா்கள் அதன் தாா்ப்பாய்களைக் கிழித்து, அதிலிருந்த பிஸ்கட் பெட்டிகளை திருடிச் சென்று விட்டனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT