விருதுநகர்

அருப்புக்கோட்டையில் ரூ. 4 கோடியில் உரம் தயாரிப்பு நிலையம்: முதல்வா் திறந்து வைத்தாா்

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கசடு, கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் நிலையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

அருப்புக்கோட்டை நகராட்சித் துறை மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில் அருப்புக்கோட்டையிலிருந்து சுக்கிலநத்தம் செல்லும் சாலையில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கசடு, கழிவுகளிலிருந்து உரம் தயாரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் அக்கட்டடத்தை திறந்து வைத்தாா்.

இதையொட்டி அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் நகா்மன்றத் தலைவா் சிவப்பிரகாசம் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் மேகநாதரெட்டி கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனா்.

இதில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியா் கல்யாணக்குமாா், நகராட்சி ஆணையாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT