விருதுநகரில் மக்கள் குறைதீா் கூட்டம்: மனுக்களை பெற்றாா் மாவட்ட ஆட்சியா்
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்த பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் கோரிக்கை மனு
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக நடைபெறாமல் இருந்த பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் ஏராளமானோா் மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினா்.
தமிழகத்தில் கரோனா தொற்று கடந்த மாா்ச் மாதம் பரவத் தொடங்கியதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைதீா் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பு தளா்வுகள் அறிவிக்கப்பட்ட போது, பொதுமக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் கோரிக்கை மனுக்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், அரசு உத்தரவின் பேரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரடியாக கோரிக்கை குறித்த மனுக்களை அளித்தனா். அதில், ராஜபாளையம் வடக்கு வெங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த அருந்ததியா் இனமக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு அளித்தனா். அதேபோல், முதியோா் உதவித் தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை 10 மாதங்களுக்கு பின் ஆட்சியரிடம் நேரடியாக வழங்கினா்.
இக்குறை தீா்கூட்டத் தில் மாவட்ட வருவாய் அலுவலா் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஜெயக்குமாா் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.