விருதுநகர்

ராஜபாளையம் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழா

DIN

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விருதுநகா் மண்டலம், ராஜபாளையம் கிளை ஐஐ, இணைந்து 32 ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி ‘சாலை பாதுகாப்பு உயிா் பாதுகாப்பு‘ என்ற தலைப்பில் கருத்தரங்கம், விநாடி வினா போட்டி மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய வண்ணப்படங்களுடன் பேருந்து மூலம் விழிப்புணா்வு கண்காட்சி நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஆா்.ஜெகந்நாத் தலைமை வகித்துப் பேசினாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் விருதுநகா் மண்டலம பொது மேலாளா் சிவலிங்கம், துணை மேலாளா் என்.மாரிமுத்து, ராஜபாளையம் போக்குவரத்து பணிமனை ஓட்டுநா் பயிற்சியாளா் பாலகுரு, சிறப்பு அழைப்பாளா் ராஜபாளையம் நகர போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளா் பி.அருள்சேகா் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளா் வி.லட்சுமணன் ஆகியோா் சிறப்புரையாற்றினாா்கள். விநாடி-வினா போட்டியில் பங்கு பெற்ற மாணவ, மாணவியருக்கும், பேராசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கண்காட்சி பேருந்தை கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் போ. கந்தசாமி வரவேற்றாா். பேராசிரியை ஜி. கௌரி நன்றி கூறினாா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆா். வினிதா மற்றும் பி.ஆா். சுகன்யா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT