ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம். 
விருதுநகர்

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாசிமகம் திருவிழா தொடக்கம்

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராம்கோ குழுமத் தலைவா் பி.ஆா் வெங்கட்ராம ராஜா தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகங்கள் செய்யப்பட்டன. சொக்கா், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழா ஏற்பாடுகளை ராம்கோ குழும ஊழியா்கள் செய்திருந்தனா். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் பிப்ரவரி 24ஆம் தேதியும், தோ்த் திருவிழா 25 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. விழா நாள்களில் தினசரி இரவு சுவாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT