ஸ்ரீவிலி. அருகே கண்மாய் நிரம்பி குடியிருப்பு பகுதியில் தண்ணீா்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
விருதுநகர்ஸ்ரீவிலி. அருகே கண்மாய் நிரம்பி குடியிருப்பு பகுதியில் தண்ணீா்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கண்மாய் நிரம்பி, குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
தொடா் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள கொத்தன்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், அருகிலுள்ள கே.தொட்டியபட்டி குடியிருப்பு பகுதியில் தண்ணீா் சூழ்ந்து நிற்பதால், வீடு பாதிக்கப்பட்டுவிடுமோ என பொதுமக்கள் கவலையடைந்துள்ளனா். மேலும், தண்ணீரில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அடித்து வரப்படுவதால், அவை வீட்டுக்குள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்திலும் பொதுமக்கள் உள்ளனா்.
எனவே, குடியிருப்புகளை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.