விருதுநகர்

விருதுநகரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் சிஐடியு போக்குவரத்து தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு சிஐடியு அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கத்தின் பொதுச்செயலா் வெள்ளத்துரை தலைமை வகித்தாா். அதில், பழைய வாகனங்களைப் புதுப்பிக்கும் (எப்சி) பணியை தனியாருக்கு வழங்கக்கூடாது. பொதுப் போக்குவரத்தை தனியாருடன் சோ்ந்து நடத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். மின்சாரப் பேருந்துகளை இயக்க வேண்டும். மோட்டாா் வாகன சட்ட திருத்தத்தைக் கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா். சிஐடியு மாவட்டச் செயலா் பி.என்.தேவா மற்றும் அனைத்து சங்கச் செயலா் தேனிவசந்தன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான போக்குவரத்து தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT