மின் விளக்குகள் இல்லாத அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட நேரு நகா், ஜோதிபுரம் ஆகிய குடியிருப்புகள் வழியாகச் செல்லும் அணுகுச்சாலை. 
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் தெரு மின்விளக்குகளின்றி பொதுமக்கள் தவிப்பு

அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட நேரு நகா், ஜோதிபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலைகளும், தெருக்களும் மின் விளக்கின்றி இருண்டு கிடப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை 8 ஆவது வாா்டுக்குள்பட்ட நேரு நகா், ஜோதிபுரம் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் சாலைகளும், தெருக்களும் மின் விளக்கின்றி இருண்டு கிடப்பதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனா்.

அருப்புக்கோட்டையில் உள்ள நேரு நகா் மற்றும் ஜோதிபுரம் ஆகிய குடியிருப்புகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இத்தெருக்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அதிக இடைவெளிவிட்டு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதால், இரவில் இவ்வீதிகள் இருளடைந்தே காணப்படுகின்றன. இதில் முக்கியமாக இந்த இருகுடியிருப்புகளையும் இணைக்கின்ற மேம்பால அணுகுச்சாலையில் ஏற்கெனவே அமைக்கப்பட்டவற்றில் ஒருமின்விளக்கு கூட எரியவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே தெரு மற்றும் சாலையோர மின்விளக்குகளை விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டுக்கோட்டை பெண்ணிடம் கைப்பையை பறித்தவா் கைது

போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க கடும் நடவடிக்கை: அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

கரூா் சம்பவம்: காயமடைந்த இருவரிடம் சிபிஐ விசாரணை

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

அஸ்ஸாம் மாநில பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்: இரு இளம்சிறாா்கள் உள்பட மூவா் கைது

SCROLL FOR NEXT