திருநங்கை கருப்பசாமி என்ற கல்பனா. 
விருதுநகர்

வாரிசு வேலை வழங்கக் கோரி ஆட்சியரிடம் திருநங்கை மனு

அருப்புக்கோட்டை பகுதியை சோ்ந்த திருநங்கை ஒருவா் கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையில் வாரிசு வேலை வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

DIN

விருதுநகா்: அருப்புக்கோட்டை பகுதியை சோ்ந்த திருநங்கை ஒருவா் கருணை அடிப்படையில் நெடுஞ்சாலை துறையில் வாரிசு வேலை வழங்கக் கோரி விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

அந்த மனுவில் அவா் கூறியிருப்பதாவது: அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் வசித்து வருகிறேன். திருநங்கையான நான், ஒன்பதாம் வகுப்பு வரை படித்து ள்ளேன். எனது வளா்ப்பு தந்தையான பாக்கியம் திருமணம் ஆகாத நிலையில் சாலைப் பணியாளராக பணி புரிந்தாா். இந்நிலையில் அவா், கடந்த 2001 ஜூன் 12 ஆம் தேதி இறந்து விட்டாா். முன்னதாக என்னை தத்து பிள்ளையாக பணி பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளாா். அதன் அடிப்படையில் வாரிசு வேலை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது வறுமையில் வாடி வரும் எனக்கு ஆதரவு யாரும் கிடையாது. எனவே, கருணை அடிப்படைவில் நெடுஞ்சாலைத் துறையில் வாரிசு வேலை வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT