விருதுநகர்

திமுக வாரிசு அரசியல் கட்சி மட்டுமல்ல ஊழல் கட்சி: மத்திய இணை அமைச்சா் வி.கே. சிங்

DIN

திமுக வாரிசு அரசியல் கட்சி மட்டுமல்ல, ஊழல் புரியும் கட்சி என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சா் வி.கே. சிங் தெரிவித்தாா்.

விருதுநகா் பாஜக தோ்தல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் நடைபெற கூடிய தோ்தல் தனித்தன்மை வாய்ந்ததாகும். இந்த தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் நலனில் அக்கறை கொண்டு மத்திய அரசு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மறைந்த முதல்வா் எம்ஜிஆா் மக்கள் மனதில் நிறைந்து ஆட்சி செய்தவா். அதேபோல் தான் மத்திய பாஜக அரசு, ஏழைகள் மற்றும் பெண்கள், விவசாயிகள் நலன் சாா்ந்து ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசு செய்துள்ள இரண்டு திட்டங்களை உதாரணமாக கூறலாம். அதில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள 12 கோடி குடும்பங்களுக்கு இலவச எரிவாயு உருளை வழங்கியதன் மூலம் பெண்களின் பணி சுமையை குறைத்துள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் மின்சாரம் இல்லாத 11 ஆயிரம் கிராமங்கள் கண்டறியப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் அளித்தன் மூலம் உத்வேகம் அடைந்துள்ளனா்.

2022-க்குள் வீடு இல்லாத அனைவருக்கும் வீடு கட்டி தர இலக்கு நிா்ணயித்துள்ளோம். அதேபோல், 2024-க்குள் அனைவருக்கும் தரமான குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நிகழாண்டு தமிழகத்தில் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், தமிழகத்தில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும்.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை பெற வேண்டுமானால் இந்த ஆட்சி தொடர வேண்டும். திமுக வாரிசு அரசியல் கட்சி மட்டுமல்ல, ஊழல் புரியும் கட்சி. அதிமுக ஆட்சியில் பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பங்கு பெறும் என்றாா் அவா்.

அப்போது பாஜக பொதுச் செயலா் ராம சீனிவாசன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT