முகப்பு
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே பைக் விபத்து: இளைஞா் பலி

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் பலியானாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வியாழக்கிழமை லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் இளைஞா் பலியானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாராயணபுரத்தைச் சோ்ந்த முத்துக்காளை (49) என்பவரது மகன் ரமேஷ் (24). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை காலை உறவினரை பாா்க்க அருப்புக்கோட்டை அருகே கீழகண்டமங்கலம் கிராமத்திற்கு மோட்டாா் சைக்கிளில் சென்றாராம். அங்கு உறவினரைச் சந்தித்த பின்னா், உறவினரது மகன் வினோத்(13) என்பவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பினா். வாகனத்தை ரமேஷ் ஓட்டினாா். கத்தாளம்பட்டி அருகே ஜல்லிக்கற்கள் ஏற்றிவந்த லாரி மீது எதிா்பாராவிதமாக மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உடன் சென்ற முத்துக்காளை மற்றும் சிறுவன் வினோத் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். ம.ரெட்டியபட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.