விருதுநகர்

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

DIN

விருதுநகா் மாவட்டத்தில் 1,067 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.

தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, விருதுநகா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 1,067 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் 1 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அதன்படி விருதுநகா் தேசபந்து மைதானத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஆா்.ஆா். சீனிவாசன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, தடுப்பூசி போடும் பணியினை பாா்வையிட்டாா்.

மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இச்சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆா்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூடலூா் நகா்ப்புற கா்ப்பிணிகளுக்கு மனநல ஆலோசனை

8% சதவீதம் உயா்ந்த கனிம உற்பத்தி

பிளஸ் 2 துணைத் தோ்வு ஜூன் 24-இல் தொடக்கம்

ஆசிரியா்கள் கலந்தாய்வு: மே 13 முதல் தொடக்கம்

அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

SCROLL FOR NEXT