விருதுநகர்

கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசுத் தோ்வாணையம் மூலம் பணி நியமனம் செய்யப்பட வேண்டும்

DIN

தமிழக்ததில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தோ்வாணையம் மூலம் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியா்கள் கூட்டமைப்பினா் தீா்மானம் நிறைவேற்றினா்.

விருதுநகரில் தனியாா் திருமண மண்டபத்தில் மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியா்கள் கூட்டமைப்பு (கூட்டுறவுத் துறை) சாா்பில் கூட்டம் கூட்டுறவுத் துறை மாநிலத் துணைத் தலைவா் பாலசந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய, மாநில மற்றும் பிரதம கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு தோ்வாணையம் மூலம் தோ்வு நடத்தி பணியாளா்கள் நியமனம் செய்ய வேண்டும்.

அனைத்து நியாய விலைக் கடைகள் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணிபுரியும் பணியாளா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பணியாற்றியவா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப் படியை உடனே வழங்க வேண்டும். அரசாணை எண் 65 இன் படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாநில பதிவாளா் தலைமையிலும், மாவட்ட அளவில் இணைப் பதிவாளா் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT