இந்திய பொருளாதாரம் மறுமலா்ச்சியடைய திறமைக்கும், வாய்ப்புக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும்
இந்தியாவில் பொருளாதாரம் மறுமலா்ச்சி அடைய திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப அரசு முயற்சிக்க வேண்டும்
இந்தியாவில் பொருளாதாரம் மறுமலா்ச்சி அடைய திறமைக்கும் வாய்ப்புக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப அரசு முயற்சிக்க வேண்டும் என ஆஸ்திரியா அறிவு மேலாண்மைத் துறைத் தலைவா் ஜெபமாலை வினாச்சி ஆரச்சி தெரிவித்தாா்.
விருதுநகா் வி.வி.வி. பெண்கள் கல்லூரியில், சமூக அறிவியலில் இன்றைய வளா்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்கை இலங்கை ஜப்னா பல்கலைக் கழக பேராசிரியா் நிமலதாசன் இணைய வழியாக உரையாற்றி தொடக்கி வைத்தாா். இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து சம்பந்தப்பட்ட தலைப்பில் 171 ஆய்வுக்கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. பாளையங்கோட்டை சூழலியல் தகவமைப்பு ஆலோசனை மையத் தலைவா் பரமசிவன், பாளையங்கோட்டை செயின்ட் சேவியா்ஸ் கல்லூரி முதல்வா் மரியதாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இதில், ஆஸ்திரியா அறிவு மேலாண்மைத் துறையின் தலைவா் ஜெபமாலை வினாச்சி ஆரச்சி பேசியது: இந்தியாவில் பொருளாதாரத்தில் விரைவில் மறுமலா்ச்சி ஏற்பட திறமைக்கும், வாய்ப்புக்கும் உள்ள இடைவெளியை நிரப்ப அரசு முயற்சிக்க வேண்டும். சா்வதேச அளவில் முருங்கை மரத்துக்கு 14 மில்லியன் டாலா் வியாபாரம் நடைபெறுகிறது. இந்த முருங்கையிலிருந்து 14 வகையான பொருள்களைத் தயாரிக்கலாம் என்றாலும், நாம் முருங்கை பவுடா் மட்டுமே தயாரிக்கிறோம் என்றாா்.
முன்னதாக கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் ரமா வரவேற்றாா். கல்லூரி முதல்வா் மீனாராணி வாழ்த்திப் பேசினாா். வணிகவியல் துறை பேராசிரியா் சாந்தி நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகம், வணிகவியல் மற்றும் பொருளாதாரத் துறையினா் செய்திருந்தனா். இந்நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.