முகப்பு
விருதுநகர்

பள்ளிகளில் காலைச் சிற்றுண்டியை சுய உதவி குழுவினா் வழங்க எதிா்ப்பு

பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டியை மகளிா் சுய உதவிக் குழுவினா் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

பள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டியை மகளிா் சுய உதவிக் குழுவினா் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே பள்ளிகளில் பணி புரிந்து வரும் சத்துணவு ஊழியா்கள் மூலம் காலை சிற்றுண்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சங்கத்தினா் தெரிவித்தனா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.