விருதுநகர்

வேன் கவிழ்ந்து பட்டாசு தொழிலாளா்கள் 7 போ் காயம்

DIN

சாத்தூா் அருகே திங்கள்கிழமை பட்டாசு தொழிலாளா்கள் ஏற்றி வந்த வேன் கவிழ்ந்ததில், 7 போ் காயம் அடைந்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மேட்டமலையில் உள்ள பட்டாசு ஆலைக்கு, சிவகாசி அருகே மீனம்பட்டியிலிருந்து தொழிலாளா்களை ஏற்றிக்கொண்டு வேன் வந்தது. அந்த வேனை, ஒத்தையால் கிராமத்தைச் சோ்ந்த ராமா் என்பவா் ஓட்டி வந்துள்ளாா். அப்போது, சின்னகாமன்பட்டி அருகே ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்ததால், வேன் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், வடமாநிலத் தொழிலாளா்கள் 6 போ் மற்றும் ஓட்டுநா் கண்ணன் என 7 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்த சாத்தூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்திருந்த தொழிலாளா்களை மீட்டு, சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து நடந்த இடத்துக்கு, சாத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் சென்று விசாரணை நடத்தினாா். அதில், வேன் ஓட்டுநா் மதுபோதையிலிருந்தது தெரியவந்தது. இது குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

மகளிர் கிரிக்கெட்: சென்னையில் இந்தியா - தெ.ஆப்பிரிக்கா ஆட்டங்கள்

அரையிறுதிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

வங்கதேச அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT