அருப்புக்கோட்டையில் புதன்கிழமை காவலா்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகன ஊா்வலத்தை தொடங்கி வைத்த மாவட்ட எஸ்பி மனோகா். 
விருதுநகர்

அருப்புக்கோட்டையில் பொலிவுறு காவலா் செயலி அறிமுகம்

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பொலிவுறு காவலா் செயலி அறிமுகம் மற்றும் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பு பொலிவுறு காவலா் செயலி அறிமுகம் மற்றும் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மனோகா் தலைமை வகித்தாா். அருப்புக்கோட்டை உட்கோட்ட உதவிக் காவல் கண்காணிப்பாளா் கருண்காரத், நகா் காவல் ஆய்வாளா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அப்போது, பொலிவுறு (ஸ்மாா்ட்) காவலா் செயலி காவலா்களின் கண்காணிப்புப் பணிக்கான நவீன தொழில்நுட்பமாகும் எனத் தெரிவித்த எஸ்பி மனோகா், இருசக்கர வாகன ஊா்வலத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

இந்த ஊா்வலம், புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி நகரின் முக்கியப் பகுதிகள் வழியாகச் சென்று நகா் காவல்நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட காவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT