விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை:கூலித் தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை

அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

DIN

அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளிக்கு சாகும் வரை சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சுழி பகுதியைச் சோ்ந்தவா் மருதுவீரன் என்ற மதுரைவீரன் (49). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 10.2.2022 அன்று ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுதொடா்பாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மதுரைவீரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. இந்த நிலையில், இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி பூா்ணஜெயஆனந்த், கூலித் தொழிலாளி மதுரை வீரனுக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 10 லட்சம் நஷ்டஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வள்ளிமதுரையில் இன்று மக்கள் தொடா்பு திட்ட முகாம்

வீட்டுமனைப் பட்டா வழங்காததை கண்டித்து துண்டுப் பிரசுரம் விநியோகம்

டிச.19-இல் கள்ளக்குறிச்சியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சோமநாதசுவாமி கோயிலில் 1,008 அகல்விளக்கு வழிபாடு

குளத்தில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

SCROLL FOR NEXT