விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட கணேசன். 
விருதுநகர்

மகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தந்தையும் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தையும் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே புதன்கிழமை மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தந்தையும் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி - வெம்பக்கோட்டை சாலை போ்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த சித்திரவேல் மகன் கணேசன் (36). லாரி ஓட்டுநா். இவரது மனைவி உமையலட்சுமி. இவா்களது மகள் அபிநயா (9), மகன் மனோஜ்குமாா் (6).

இந்த நிலையில், 2018-இல் உடல் நலம் பாதிக்கப்பட்டு உமையலட்சுமி உயிரிழந்தாா். இதனால், மனோஜ்குமாா் விளாத்திகுளத்தில் உள்ள தனது பாட்டி முனியம்மாள் வீட்டில் தங்கிப் படித்து வருகிறாா். போ்நாயக்கன்பட்டியில் தனது மகள் அபிநயாவுடன் கணேசன் வசித்து வந்தாா்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்னா் கணவரைவிட்டுப் பிரிந்திருந்த உமையலட்சுமியின் அக்காள் ராதிகாவை (38) கணேசன் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டாா். இந்தத் தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஏற்பட்ட தகராறில் ராதிகா தனது தாய் ஊரான விளாத்திகுளத்துக்குச் சென்றுவிட்டாராம். இதனால் மனமுடைந்த கணேசன், புதன்கிழமை தனது மகள் அபிநயாவுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி நகா் போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்றி கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT