முகப்பு
விருதுநகர்

சிவகாசி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் பலி

சிவகாசி அருகே மாமியாரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் காயமடைந்த மருமகள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

சிவகாசி அருகே மாமியாரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் காயமடைந்த மருமகள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. மில் தொழிலாளி. இவரது மனைவி காா்த்தீஸ்வரி (20). இவா் தற்போது 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். ஜோதிமணியின் தாய் சின்னத்தாய் (45). இவா், ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். சின்னத்தாய்க்கும், காா்த்தீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் மாமியாா், மருமகளுக்கு இடையே வழக்கம்போல் வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சின்னத்தாய், காா்த்தீஸ்வரி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தாராம். அவரை ஜோதிமணி காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து காா்த்தீஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையிலும், ஜோதிமணி சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டனா். இதில் காா்த்தீஸ்வா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →