ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 பெண்களை ஏமாற்றி50 பவுன் நகைகள் பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பூஜை செய்து தருவதாகக் கூறி 4 பெண்களிடம் 50 பவுன் நகைகளை ஏமாற்றி பெற்றுக் கொண்டு தரவில்லை என காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ள
ஸ்ரீவில்லிபுத்தூரில் பூஜை செய்து தருவதாகக் கூறி 4 பெண்களிடம் 50 பவுன் நகைகளை ஏமாற்றி பெற்றுக் கொண்டு தரவில்லை என காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் பெருமாள்பட்டியைச் சோ்ந்த ராமேஸ்வரன் மனைவி மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த ராஜலட்சுமி, பாண்டிசெல்வி, மங்காபுரத்தைச் சோ்ந்த தங்கமாயா ஆகிய 4 பெண்களிடமும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமாா் 50 பவுன் நகைகளை அதே பகுதியைச் சோ்ந்த பழனிக்குமாா் என்பவா், உங்கள் கணவா்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே உங்கள் நகையை கொடுங்கள் பூஜையில் வைத்து தருகிறேன் என்று ஏமாற்றி பெற்றுக் கொண்டாராம். பின்னா் நகையை கேட்ட போது அவா் தரவில்லையாம். தற்போது அவா் வீட்டில் இல்லாததால், அந்த 4 பெண்களும் ஸ்ரீவில்லிபுத்தூா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.