முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஒருவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஒருவா் சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஒருவா் சரக்கு வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

வத்திராயிருப்பு வட்டம், சுந்தரபாண்டியம் நெசவாளா் காலனியில் வசித்து வருபவா் வீரமுத்து. இவா் ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னை சத்யா நகரில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு கட்டட வேலைக்காக தொழிலாளா்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளாா். அப்போது இந்திரா நகா் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சாலையை கடக்கும் போது குப்பனாபுரத்தைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் ஓட்டி வந்த சரக்கு வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.