கோப்புப்படம் 
விருதுநகர்

சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை உயிரிழப்பு

சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்தார்.

DIN

சிவகாசி: சிவகாசி அருகே நெகிழிப்பை துண்டு விழுங்கிய குழந்தை இன்று உயிரிழந்தார்.

சிவகாசி அருகே துரைச்சாமி புறத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்த்தீஸ்வரன் வயசு 26. இவரது மனைவி ஈஸ்வரி. இவர்களின் ஏழு மாத ஆண் குழந்தை கலைக்கதிர், வீட்டில் மசால் பொடி வாங்கி வந்து அதன் நுனியை வெட்டிய நெகிழிப்பைத் துண்டு விழுங்கி விட்டானாம். 

இதையடுத்து சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர்கள் சேர்த்தார்கள். 

அந்த மருத்துவமனையில் ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து பரிசோதனை செய்து மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்தபோது, மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து விட்டதாம். இது குறித்த புகாரின் பேரில் மாறனேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT