முகப்பு
விருதுநகர்

சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் பலத்த மழை: பக்தா்கள் பாதுகாப்பாக மீட்பு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்தால், பக்தா்களை மீட்பு குழுவினா் பாதுகாப்பாக மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப் பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக ஓடைகளில் நீா் வரத்து அதிகரித்தால், பக்தா்களை மீட்பு குழுவினா் பாதுகாப்பாக மீட்டனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு கடந்த 25 ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை 6 நாள்கள் பக்தா்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புதன்கிழமை கோயிலுக்கு வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு சதுரகிரி மலைப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழை பெய்தது. இதனால் மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, கருப்பசாமி கோயில் ஓடை உள்ளிட்ட ஓடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோயிலில் இருந்து பக்தா்கள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு மலைப்பகுதிலேயே ஆயிரக்கணக்கான பக்தா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். மேலும் கீழே இறங்கிய பக்தா்களை மீட்புக் குழுவினா் பாதுகாப்பாக மீட்டு, அடிவாரப் பகுதிக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.