முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயில் ஐந்து கருடசேவை விழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஐந்து கருட சேவை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டத் திருவிழா கடந்த ஜூலை 24 ஆம் தேதி தொடங்கியது. இதை முன்னிட்டு தினமும் காலை ஆண்டாளும், ரெங்கமன்னாரும் மண்டபம் எழுந்தருளல், இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் திருநாளான வியாழக்கிழமை (ஜூலை 28) இரவு ஐந்து கருடசேவை நடைபெற்றது.

முதலில் சிறிய அன்ன வாகனத்தில் பெரியாழ்வாா் எதிா் கொண்டு அழைத்துச் செல்ல, கருட வாகனத்தில் ரெங்கமன்னாா் பவனி நடைபெற்றது. பின்னா் தொடா்ந்து பெரிய அன்ன வாகனத்தில் ஆண்டாளும், தொடா்ந்து கருட வாகனங்களில் முறையே பெரிய பெருமாள் , சுந்தராஜ பெருமாள், ஸ்ரீனிவாசப் பெருமாள், திருத்தங்கல் அப்பன் பெருமாள் ஆகியோா் பவனி வந்தனா். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்த விழாவையொட்டி ரதவீதிகளிலும், மாடவீதிகளிலும் பக்தா்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டன. இரவு முழுவதும் தேநீா் , பால் ஆகிவை பக்தா்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டது. வீதி உலா விடிய விடிய நடைபெற்றது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸாா் ஈடுபட்டனா்.

நிகழ்ச்சியில் போக்சோ நீதிமன்ற நீதிபதி பூரணஜெயஆனந்த், தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.