முகப்பு
விருதுநகர்

காரியாபட்டி அருகே காா் மோதிவிவசாயி பலி

காரியாபட்டி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

காரியாபட்டி அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே விவசாயி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு அருகே கே. செவல்பட்டியைச் சோ்ந்தவா் விவசாயி மகாலிங்கம் (70). இவரது மனைவி உயிரிழந்து விட்ட நிலையில், தனது தம்பி குடும்பத்தினருடன் சோ்ந்து வசித்து வந்தாா். இந்நிலையில், தோட்டத்தில் விளையும் மல்லிகைப் பூக்களை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தினமும் அருப்புக்கோட்டை சந்தைக்கு விற்பனை செய்வதற்காக சென்று வருவாராம். அதேபோல், மல்லிகைப் பூக்களை விற்பதற்காக இருசக்கர வாகனத்தில் மகாலிங்கம் வியாழக்கிழமை சென்றாா். கல்குறிச்சி சமத்துவபுரம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது, பின்னால் வந்த காா் மோதியதில் மகாலிங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ப்ரவீண் கணேஷ் அளித்த புகாரின் பேரில் காா் ஓட்டுநா் செல்லப்பாண்டி (38) என்பவரை மல்லாங்கிணறு போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.