முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவிலி. அருகே விபத்து: ஒருவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் தைலாகுளம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் பொன்னுசாமி(55). இவா் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் தைலாகுளம் பேருந்து நிறுத்தத்தில் வலது புறமாக திரும்புவதற்கு நின்று கொண்டிருந்த போது, அதே சாலையில் சிவகாசி தென்றல் நகரைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ்(54) என்பவா் காரை ஓட்டி வந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக காா் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பொன்னுச்சாமி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.