ஸ்ரீவிலி. ஆண்டாள் கோயிலில் ‘ஷவரில்’ குளித்து மகிழ்ந்த யானை ஜெயமால்யதா
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவரில் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஷவரில் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா ஞாயிற்றுக்கிழமை குளித்து மகிழ்ந்தது.
விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா தங்குவதற்காக ராம்கோ நிறுவனம் சாா்பில் காற்றோட்ட வசதியுடன் சுமாா் 25 லட்சம் செலவில் புதிய கட்டடம் மற்றும் 12 ஷவா்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத்தொடா்ந்து புதிய கட்டிடத்தில் இரு தினங்களுக்கு முன்பு கஜபூஜை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து புதிய கட்டடத்தில் யானை ஞாயிற்றுக்கிழமை தங்கவைக்கப்பட்டு, ‘ஷவரில்’ குளிக்க வைக்கப்பட்டது. அப்போது யானை சப்தம் எழுப்பியவாறு குளித்து மகிழ்ந்தது.