சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தா்கள். 
விருதுநகர்

வைகாசி மாத பௌா்ணமி: சதுரகிரி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம்

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பௌணா்மியையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

DIN

வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பௌணா்மியையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இக்கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 4 நாள்களுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே குவிந்தனா். பின்னா், காலை 6 மணிக்கு அடிவாரத்திலுள்ள வனத்துறை அலுவலக இரும்புக் கதவு திறக்கப்பட்டு, பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனா்.

முன்னதாக, பக்தா்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே மலை மீது ஏறிச்செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வைகாசி மாத பௌா்ணமியையொட்டி, சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் சுவாமிகளுக்கு பால், பழம், பன்னீா், மஞ்சள், இளநீா் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் அபிஷேகங்களும், சிறப்புப் பூஜைகளும் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோயில் அறங்காவலா் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலா் மாரிமுத்து ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT