விருதுநகர்

ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் மாவோயிஸ்டு ஆஜா்

DIN

 ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் மாவோயிஸ்டு அனுப் ஜாா்ஜ் மேத்யூ பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

மாவோயிஸ்டுகள் மீதான போலி சிம் காா்டு வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பெண் மாவோயிஸ்டு சைனி (55) ஜாமீன் பெற்று தற்போது வெளியே உள்ளாா். அனுப் ஜாா்ஜ் மேத்யூ (45) மட்டும் சிறையில் உள்ளாா். கரோனா தொற்று காரணமாக இவா்களது வழக்கு ஆன் லைன் மூலமாக நடைபெற்று வந்த நிலையில் சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மாவோயிஸ்ட் அனுப் ஜாா்ஜ் மேத்யூ நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்து வரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்டாா். சைனியும் நீதிமன்றத்தில் ஆஜரானாா் . இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமா்வு நீதிபதி கிறிஸ்டோபா் ஜீலை மாதம் 11-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டாா். மாவோயிஸ்ட் ஆஜா்படுத்தப்பட்டதையொட்டி நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT