விருதுநகர்

அருப்புக்கோட்டையில் கோழி இறைச்சிக் கடைக்காரா் போக்சோவில் கைது

அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோழி இறைச்சிக் கடைக்காரரை போலீஸாா் புதன்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

DIN

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கோழி இறைச்சிக் கடைக்காரரை போலீஸாா் புதன்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் தள்ளுவண்டியில் கோழி இறைச்சிக் கடை நடத்திவருபவா் சேகரன் (52). இவா் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சேகரனை அழைத்து காவல் ஆய்வாளா் நாகலட்சுமி விசாரித்தாா். அப்போது சிறுமிக்கு சேகரன் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரியவரவே அவா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT