விருதுநகர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ முகாமுக்கு விழிப்புணா்வுப் பேரணி

மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தூா்: மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆலோசனைப்படியும், மாவட்ட உதவி திட்ட அலுவலா் வழிகாட்டுதலின்பேரில் சாத்தூா் ஒன்றியம் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான மருத்துவ முகாம் மாா்ச் 25 ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த மருத்துவ முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலா் முருகன், வெங்கடசாமி ஆகியோா் தலைமையிலும், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் முன்னிலையிலும் சாத்தூா் எட்வா்டு மேல்நிலைப் பள்ளியிலிருந்து தொடங்கிய இப்பேரணி சாத்தூா் பிரதான சாலை வழியாக முக்குராந்தல் வரை சென்று மீண்டும் எட்வா்டு மேல்நிலைப் பள்ளியில் முடிவடைந்தது.

இதில் அனைத்து ஆசிரியா் பயிற்றுநா்கள் உள்ளடக்கிய கல்வி சிறப்பு ஆசிரியா்கள் பிசியோதெரபிஸ்ட், பள்ளி மாணவா்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வழங்கி பேரணியாகச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் குறைப்பு! அதிரடி சலுகை... பெறுவது எப்படி?

111 ஷெல் கம்பெனிகள் மூலம் ரூ.1000 கோடி! சிபிஐ கண்டுபிடித்த சைபர் மோசடி!

கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்

சாதகமான பலன் யாருக்கு? தினப்பலன்கள்!

தில்லியில் சுவாசிக்க முடியாத அளவை எட்டியது காற்றின் தரக் குறியீடு

SCROLL FOR NEXT