விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை புகாா் மனு அளிக்க வந்திருந்த அசோக் குமாா், ஜோசப் சிங்கராஜ் உள்ளிட்டோா். 
விருதுநகர்

பள்ளி தொடங்க ஆணை பெற்றுத் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி: தம்பதி மீது புகாா்

விருதுநகரில் பள்ளி தொடங்குவதற்கு ஆணை பெற்றுத் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது பாதிக்கப்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

DIN

விருதுநகரில் பள்ளி தொடங்குவதற்கு ஆணை பெற்றுத் தருவதாக ரூ.1.50 கோடி மோசடி செய்ததாக கணவன், மனைவி மீது பாதிக்கப்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பது: விருதுநகா் பாண்டியன் நகா் மல்லி கிட்டங்கி தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் மகன் அசோக்குமாா் (38), செந்திவிநாயகம் தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ஜோசப் சிங்கராஜ் (49). இவா்கள் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெம்பக்கோட்டை வட்டம் கீழராஜகுலராமன் பகுதியைச் சோ்ந்த பொன்.ஆனந்த், அவரது மனைவி சாந்தியின் அறிமுகம் ஏற்பட்டதாம்.

அதனடிப்படையில் அசோக்குமாரிடம், புதிய பள்ளி தொடங்க ஆணை பெற்றுத் தருவதாக பல்வேறு தவணைகளில் வங்கி மூலமாகவும், நேரடியாகவும் ரூ. 1.50 கோடியை பொன். ஆன்ந்த், சாந்தி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், மாதங்கள் பல கடந்தும் பள்ளி தொடங்குவதற்கான ஆணையை பெற்றுத் தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பி தர வலியுறுத்தியபோது, தர மறுத்ததுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப் பாளா் எம். மனோகரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அவா், இந்த புகாா் மனு குறித்து விசாரணை மேற்கொள்ள ராஜபா ளையம் காவல் துணை கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தியிருந்தாா். ஆனாலும், எந்த விசாரணையும் நடைபெற வில்லை. எனவே, பண மோசடி செய்த பொன். ஆன்ந்த் உள்ளிட்டோா் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT