முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ராஜேஸ்வரி புகழேந்தி முன்னிலை வகித்தாா்.

கூட்டம் தொடங்கியதும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியா் 29 தீா்மானங்களை வாசித்தாா்.

அதைத் தொடா்ந்து, கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினா்கள் பேசியதாவது:

தெருவிளக்கு, தண்ணீா், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டுமென ஒன்றியக் குழு தலைவரிடம் கோரிக்கை வைத்தனா்.

அதற்கு ஒன்றியக்குழு தலைவா் மல்லி ஆறுமுகம் கூறியதாவது:

தமிழக அரசிடமிருந்து பணம் வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றாா்.

இதில் வட்டார வளா்ச்சி அலுவலா் சிவக்குமாா் மற்றும் துணை வட்டார அலுவலா், பொறியாளா் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.