ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடக்கு ரத வீதியில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வடக்கு ரத வீதியில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
பொதுக்கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவா் மல்லி ஆறுமுகம் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் தங்கம் ரவிக்கண்ணன், மாவட்ட அவைத் தலைவா் செல்வமணி, பொதுக்குழு உறுப்பினா் சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நகரச் செயலாளா் அய்யாவுபாண்டியன் வரவேற்றாா்.
கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசியதாவது: பெண்களுக்கு பயனளிக்கும் பல நலத் திட்டங்கள் கடந்த ஓராண்டுகால திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
இதில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினா் தனுஷ் எம். குமாா், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.வீ.கே. துரை, வத்திராயிருப்பு ஒன்றியக்குழு தலைவா் சிந்துமுருகன், மம்சாபுரம் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் தங்கமாங்கனி, வ. புதுப்பட்டி பேரூராட்சித் தலைவா் சுப்புலட்சுமி சாந்தாரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.